elliot

தேவாதி தேவன் மனுவேலனே | Devadhi Devan Manuvelane / Devathi Devan Manuvelane

தேவாதி தேவன் மனுவேலனே
தாவீதின் குல இராஜனே
தூதர்கள் போற்றும் மெய் தேவனே
திரியேக பரிபாலனே

பாரினில் வந்த பரமனே உம்மை
பாடியே போற்றிடுவோம்
பாரினில் வந்த பரமனே உம்மை
பாடியே போற்றிடுவோம்

1
பாலன் பிறந்ததையே
இன்று பாரினில் சாற்றிடுவோம்
பாலன் பிறந்ததையே
இன்று பாரினில் சாற்றிடுவோம்

பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
பரமன் நம் இயேசுவையே
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
பரமன் நம் இயேசுவையே

தேவாதி தேவன் மனுவேலனே
தாவீதின் குல இராஜனே
தூதர்கள் போற்றும் மெய் தேவனே
திரியேக பரிபாலனே

2
மாட்டுத்தொழுவமொன்றில்
ஏழை மானிட ரூபம் கொண்டு
மாட்டுத்தொழுவமொன்றில்
ஏழை மானிட ரூபம் கொண்டு

மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்து
மாஜோதியாய் பிறந்தார்
மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்து
மாஜோதியாய் பிறந்தார்

தேவாதி தேவன் மனுவேலனே
தாவீதின் குல இராஜனே
தூதர்கள் போற்றும் மெய் தேவனே
திரியேக பரிபாலனே

பாரினில் வந்த பரமனே உம்மை
பாடியே போற்றிடுவோம்
பாரினில் வந்த பரமனே உம்மை
பாடியே போற்றிடுவோம்

தேவாதி தேவன் மனுவேலனே | Devadhi Devan Manuvelane / Devathi Devan Manuvelane | Sangita Santosham, Pokkishiya Sandra, Sheba Jabez, Ida Bexel, Anita Kingsly, Swarna Isaac, Annie Judy, Hannah Elliot, Anna Ranjith, Jasmin Faith | John Lazarus

Don`t copy text!