dhukkam

இகத்தின் துக்கம் துன்பம் / Igatthin Dhukkam Dhunbam / Igatthin Thukkam Thunbam

1      
இகத்தின் துக்கம் துன்பம்
கண்ணீரும் மாறிப்போம்
முடிவில்லாத இன்பம்
பரத்தில் பெறுவோம்

2        
இதென்ன நல்ல ஈடு
துன்பத்துக்கின்பமா
பரத்தில் நிற்கும் வீடு
மரிக்கும் பாவிக்கா

3        
இப்போது விழிப்போடு
போராட்டம் செய்குவோம்
விண்ணில் மகிழ்ச்சியோடு
பொற் கிரீடம் சூடுவோம்

4        
இகத்தின் அந்தகார
ராக்காலம் நீங்கிப்போம்
சிறந்து ஜெயமாக
பரத்தில் வாழுவோம்

5        
நம் சொந்த ராஜாவான
கர்த்தாவை நோக்குவோம்
கடாட்ச ஜோதியான
அவரில் பூரிப்போம்

Don`t copy text!