dhooya

மா தூய ஆவி இறங்கும் / Maa Dhooya Aavi Irangum / Maa Thooya Aavi Irangum / Maa Dhuya Aavi Irangum / Maa Thuya Aavi Irangum

1
மா தூய ஆவி இறங்கும்
விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்
ஞானாபிஷேக தைலம் நீர்
நல் வரம் ஏழும் ஈகிறீர்

2
மெய் ஜீவன் ஆறுதல் அன்பும்
உம் அபிஷேகம் தந்திடும்
ஓயாத ஒளி வீசியே
உள்ளத்தின் மருள் நீக்குமே

3
துக்கிக்கும் நெஞ்சைத் தேற்றவே
ஏராள அருள் பெய்யுமே
மாற்றார் வராமல் காத்திடும்
சீர் வாழ்வு சுகம் ஈந்திடும்

4
பிதா குமாரன் ஆவியும்
திரியேகர் என்று போதியும்
யுகயுகங்களாகவே
உம் தாசர் பாடும் பாட்டிதே

பிதா சுதன் சுத்தாவி உமக்கே
சதா நித்தியமும் ஸ்துத்தியமே
ஆமென்

Don`t copy text!