dhiviya

திவ்விய பாலன் பிறந்தீரே / Dhivviya Paalan Pirandheere / Dhivviya Paalan Pirantheere / Dhiviya Paalan Pirandheere / Dhiviya Paalan Pirantheere

1   
திவ்விய பாலன் பிறந்தீரே
கன்னி மாதா மைந்தன் நீர்
ஏழைக் கோலம் எடுத்தீரே
சர்வ லோகக் கர்த்தன் நீர்

2   
பாவ மாந்தர் மீட்புக்காக
வான மேன்மை துறந்தீர்
திவ்விய பாலா தாழ்மையாக
மண்ணில் தோன்றி ஜெனித்தீர்

3   
லோக ராஜா வாழ்க வாழ்க
செங்கோல் தாங்கும் அரசே
பூமியெங்கும் ஆள்க ஆள்க
சாந்த பிரபு இயேசுவே

4   
தேவரீரின் ராஜ்யபாரம்
நித்திய காலமுள்ளது
சர்வலோக அதிகாரம்
என்றும் நீங்கமாட்டாது

5   
வல்ல கர்த்தா பணிவோடு
ஏக வாக்காய் போற்றுவோம்
நித்திய தாதா பக்தியோடு
நமஸ்காரம் பண்ணுவோம்

6   
ஸ்தோத்திரம் கர்த்தாதி கர்த்தா
ஞானத்துகெட்டாதவர்
ஸ்தோத்திரம் ராஜாதி ராஜா
ஆதியந்தமற்றவர்

Don`t copy text!