dheivame

பரிசுத்தவான்களின் தெய்வமே | Parisuthavangalin Dheivame / Parisuththavangalin Dheivame / Parisuthavaangalin Dheivame / Parisuththavaangalin Dheivame

பரிசுத்தவான்களின் தெய்வமே
என்னை பரலோகில் சேர்த்திடும் ராஜனே
பரிசுத்தவான்களின் தெய்வமே
என்னை பரலோகில் சேர்ந்திடும் ராஜனே

இயேசு நாதா வாரும் தேவா உம்மோடு சேர்த்திடுமே
இயேசு நாதா வாரும் தேவா பரலோகில் சேர்த்திடுமே
இயேசு நாதா வாரும் தேவா உம்மோடு சேர்த்திடுமே
இயேசு நாதா வாரும் தேவா பரலோகில் சேர்த்திடுமே

1
ஆபிரகாமின் விசுவாசத்திற்குரியவரே
உலகத்தை விட்டுவிட பெலன் வேண்டுமே
ஆபிரகாமின் விசுவாசத்திற்குரியவரே
உலகத்தை விட்டுவிட பெலன் வேண்டுமே

யாக்கோபை போல போராடி ஜெயித்திட
கிருபையை தந்திடுமே
யாக்கோபை போல போராடி ஜெயித்திட
கிருபையை தந்திடுமே உந்தன்
கிருபையை தந்திடுமே

இயேசு நாதா வாரும் தேவா உம்மோடு சேர்த்திடுமே
இயேசு நாதா வாரும் தேவா பரலோகில் சேர்த்திடுமே

2
ஈசாக்கின் பயபக்திக்குரியவரே
பலியாக தந்திட திடன் வேண்டுமே
ஈசாக்கின் பயபக்திக்குரியவரே என்னை
பலியாக தந்திட திடன் வேண்டுமே

யோசேப்பை போல பாவத்தை ஜெயித்திட
பரிசுத்தம் தர வேண்டுமே
யோசேப்பை போல பாவத்தை ஜெயித்திட
பரிசுத்தம் தர வேண்டுமே உந்தன்
பரிசுத்தம் தர வேண்டுமே

இயேசு நாதா வாரும் தேவா உம்மோடு சேர்த்திடுமே
இயேசு நாதா வாரும் தேவா பரலோகில் சேர்த்திடுமே

3
தவித்திடும் மான்களை போலவே
உமக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்
தவித்திடும் மான்களை போலவே
உமக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்

பவுலை போல உமக்காக ஓடிட
ஆவியை தந்திடுமே
பவுலை போல உமக்காக ஓடிட
ஆவியை தந்திடுமே
பரிசுத்தாவியை தந்திடுமே

இயேசு நாதா வாரும் தேவா உம்மோடு சேர்த்திடுமே
இயேசு நாதா வாரும் தேவா பரலோகில் சேர்த்திடுமே

இயேசு நாதா வாரும் தேவா உம்மோடு சேர்த்திடுமே
இயேசு நாதா வாரும் தேவா பரலோகில் சேர்த்திடுமே

என்னை உம்மோடு சேர்த்திடுமே
என்னை பரலோகில் சேர்த்திடுமே

என்னை உம்மோடு சேர்த்திடுமே

பரிசுத்தவான்களின் தெய்வமே | Parisuthavangalin Dheivame / Parisuththavangalin Dheivame / Parisuthavaangalin Dheivame / Parisuththavaangalin Dheivame | R. Peterson Paul Ebenezer, I. Ratnam Paul | David Selvam | R. Peterson Paul Ebenezer

Don`t copy text!