deivamae

பூலோகத்தாரே யாவரும் / Boologatthaare Yaavarum / Poologatare Yavarum / Boologathare Yaavarum / Poologathaare Yaavarum

1
பூலோகத்தாரே யாவரும்
கர்த்தாவில் களி கூருங்கள்
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்
செலுத்திப் பாட வாருங்கள்

2
பராபரன் மெய்த் தெய்வமே
நாம் அல்ல அவர் சிஷ்டித்தார்
நாம் ஜனம் அவர் ராஜனே
நாம் மந்தை அவர் மேய்ப்பனார்

3
கெம்பீரித்தவர் வாசலை
கடந்து உள்ளே செல்லுங்கள்
சிறந்த அவர் நாமத்தை
கொண்டாடி துதி செய்யுங்கள்

4
கர்த்தர் தயாளர் இரக்கம்
அவர்க்கு என்றும் உள்ளதே
அவர் அநாதி சத்தியம்
மாறாமல் என்றும் நிற்குமே

5
விண் மண்ணில் ஆட்சி செய்கிற
திரியேக தெய்வமாகிய
பிதா குமாரன் ஆவிக்கும்
சதா ஸ்துதி உண்டாகவும்

Don`t copy text!