coimbatore

ஏற்ற காலத்தில் | Yetra Kaalathil / Yetra Kaalaththil

ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்
ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்

சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல்
சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல்
அழைத்தவரின் கரத்தில் நீ அடங்கி இருந்தால்

ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்

1
உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரே
தாயின் கரப்பத்தில் உன் கருவை கண்டாரே
உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரே
தாயின் கரப்பத்தில் உன் கருவை கண்டாரே

உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார்
உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு
உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார்
உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு

ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்
ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்

2
காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதே
கர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய் காத்திரு
காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதே
கர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய் காத்திரு

உன்னைக்கொண்டு தான் செய்ய நினைத்த
திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்
உன்னைக்கொண்டு தான் செய்ய நினைத்த
திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்

ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்
ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்

3
உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான்
தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக்கொண்டிரு
உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான்
தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக்கொண்டிரு

விசுவாசத்தில் உறுதியாய் இருந்து
சாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு
விசுவாசத்தில் உறுதியாய் இருந்து
சாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு

ஏற்ற காலத்தில் என்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்
ஏற்ற காலத்தில் என்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்

சோர்ந்து போகமாட்டேன்
நான் அவசரப்படமாட்டேன்
சோர்ந்து போகமாட்டேன்
நான் அவசரப்படமாட்டேன்

அழைத்தவரின் கரத்தில் நான் அடங்கி இருப்பேன்

ஏற்ற காலத்தில் என்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்

ஏற்ற காலத்தில் | Yetra Kaalathil / Yetra Kaalaththil | A. Wesley Maxwell | Alwyn M., Kingsly Davis | A. Wesley Maxwell / Holy Spirit Revival Ministries, Coimbatore, Tamil Nadu, India

Don`t copy text!