christy

ராஜாவுக்கு தங்க மனசு | Rajavuku Thanga Manasu / Raajaavuku Thanga Manasu

ராஜாவுக்கு தங்க மனசு
வஞ்சனை இல்லா வெள்ள மனசு
தன்னையே எனக்காய் தந்த மனசு இயேசு
ராஜாவுக்கு தங்க மனசு
வஞ்சனை இல்லா வெள்ள மனசு
தன்னையே எனக்காய் தந்த மனசு

தூரமாக கிடந்த என்ன
பாவத்துல உழன்ற என்ன
கைத் தூக்கி எடுத்து பரிசுத்தமாய் மாற்றினாரு
நான் செஞ்ச பாவங்கள
மீறுதல்கள் தூரோகங்கள
மன்னிச்சு மறந்து மகளாக மாற்றினாரு

ராஜாவுக்கு இயேசு ராஜாவுக்கு தங்க மனசு
வஞ்சனை இல்லா வெள்ள மனசு
தன்னையே எனக்காய் தந்த மனசு

ராஜா ஆ
இயேசு ராஜா ஆ

தாயின் கருவினிலே உருவம் பெறும் முன்னே
எனக்கு பேரு வெச்சு பாசத்தையும் ஊட்டினாரு
பிறந்த நாள் முதலாய் சேதமின்றி பாதுகாத்து
எனக்காக பிதாவிடம் தினமும் பரிந்து பேசுறாறு

ராஜாவுக்கு இயேசு ராஜாவுக்கு தங்க மனசு
வஞ்சனை இல்லா வெள்ள மனசு
தன்னையே எனக்காய் தந்த மனசு

ராஜா ஆ
இயேசு ராஜா ஆ

நான் செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் செஞ்சாரு
கல்வாரி இரத்தத்தால கழுவி என்ன மீட்டாரு
தனது ஜீவனையும் துட்சமாக எண்ணினாரு
உன்னதங்களில் என்னை அமர செய்து மகிழ்ந்தாரு

ராஜாவுக்கு தங்க மனசு
வஞ்சனை இல்லா வெள்ள மனசு
தன்னையே எனக்காய் தந்த மனசு

இயேசு ராஜாவுக்கு தங்க மனசு
வஞ்சனை இல்லா வெள்ள மனசு
தன்னையே எனக்காய் தந்த மனசு

உள்ளங்கையில் வரைஞ்சவரு
மனசெல்லாம் நிறைஞ்சவரு
உசுரக்கொடுத்து உசுருக்குள்ள கலந்தாரு

ராஜாவுக்கு தங்க மனசு | Rajavuku Thanga Manasu / Raajaavuku Thanga Manasu | Hannah Evangeline | Christy

Don`t copy text!