christy

உலகமே உலகமே | Ulagame Ulagame

உலகமே உலகமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
தேசமே தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு

1
தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்
மனுஷரில் செம்மையானவன் இங்கு இல்லையோ
வெறித்தவன் போல் தேசம் தள்ளாடுகின்றது
ஜனங்கள் இருதயம் கலங்கி இங்கு நிற்கிறது

2
உலகத்தில் கொள்ளை நோய் கொடிய நோய்களே
பூமியில் உண்டு தேவன் முன்குறித்தாரே
உலகத்தார் அறிவாரோ அறிந்து கொள்ளுவாரோ
கர்த்தரின் ஜனமே பயப்படாதே

மனம் பொருந்தி இயேசுவுக்கு செவியை சாய்ப்போம்
தேசத்தின் நன்மையை புசித்து வாழ்ந்திருப்போம்
ஒன்று சேர்ந்து கர்த்தரை துதித்து மகிழ்ந்திருப்போம்
கொடிய கொள்ளை நோய்களை விரட்டி அடிப்போமே

உலகமே உலகமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
தேசமே தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு

உலகமே உலகமே | Ulagame Ulagame | Jacinth David | Christy, Isaac, VSP Loveen Sekar, Gospel Manikandan

Don`t copy text!