சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க / Sina Sina Pillai Endru Ninaikkaadheenga / Chinna Chinna Pillai Yendru Ninaikaatheenga

சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க இது
சொன்னபடி நீங்களும் நடக்கணுங்க
எட்டுத்திசை இருப்பவரும் ஓடி வாருங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க
1
ஏரோது இராஜாவாயிருக்க லாமுங்க இவர்
சர்வ லோக ராஜாவாம் தெரிஞ்சிக்கிடுங்க
பார்வோனின் சேனையெல்லாம் முங்கிப் போச்சுங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க
சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க இது
சொன்னபடி நீங்களும் நடக்கணுங்க
எட்டுத்திசை இருப்பவரும் ஓடி வாருங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க
2
யூதமதத் தலைவரென்று நினைக்காதீங்க உங்கள்
மதங்களுக்கு ஜீவ நாடி இவர்தானுங்க
உப்பு இல்லா உபதேசங்கள் தேவைதானாங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க
சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க இது
சொன்னபடி நீங்களும் நடக்கணுங்க
எட்டுத்திசை இருப்பவரும் ஓடி வாருங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க
3
படிப்பு பவுசு ஜாதி நாடு பார்க்காதீங்க இந்த
பிள்ளை முன்னால் எல்லாம் சமம் தெரிஞ்சிக்கிடுங்க
புதிய ஒரு சமுதாயம் பிறக்கப் போகுதுங்க