cherie

எண்ணங்கள் | Ennangal

ஓர் ஆயிரம் எண்ணங்கள் மலர்ந்ததே
எல்லைகள் தாண்டி பறந்ததே
பல கனவுகள் என் உள்ளே உடைந்ததே
அது காணலாய் மாறினதே

ஒரு வார்த்தையால்
தூரம் போன என்னையும்
அவர் கரத்தினால்
இழுத்து கொண்டாரே
ஒரு பார்வையால்
உடைந்து போன என்னையும்
அழகாய் வனைந்தாரே

பல உறவுகள் மேகம் போல் வந்ததே
ஆனால் மழையோ இல்லையே
சில நேரங்கள் இன்பங்கள் கசந்ததே
ஏமாற்றம் வாழ்வானதே

ஒரு வார்த்தையால்
தூரம் போன என்னையும்
அவர் கரத்தினால்
இழுத்து கொண்டாரே
ஒரு பார்வையால்
உடைந்து போன என்னையும்
அழகாய் வனைந்தாரே

இயேசுவின் அன்பு
என்னை மாற்றினதே
பாவங்கள் நீக்கி
புது வாழ்வு தந்ததால்
சிகரங்கள் நோக்கி
நான் வளர்ந்திடுவேன்
உயர எழும்புவேன் நான்
உயர எழும்புவேன்
உயர எழும்புவேன்

இயேசு
தூரம் போன என்னையும்
அவர் கரத்தினால்
இழுத்து கொண்டாரே
இயேசு
உடைந்து போன என்னையும்
அழகாக வனைந்தாரே

இயேசு
தூரம் போன என்னையும்
அவர் கரத்தினால்
இழுத்து கொண்டாரே
இயேசு
உடைந்து போன என்னையும்
அழகாக வனைந்தாரே

அழகாய் வனைந்தாரே
அழகாக வனைந்தாரே

எண்ணங்கள் | Ennangal | Cherie Mitchelle | Stella Ramola | Daniel Davidson

Don`t copy text!