அழைத்தவர் உன்னை நடத்திச்செல்வாரே | Azhaithavar Unnai Nadathiselvarae / Azhaiththavar Unnai Nadaththiselvarae

அழைத்தவர் உன்னை நடத்திச்செல்வாரே
கலங்காதே நீ கலங்காதே நீ கலங்காதே
அழைத்தவர் உன்னை நடத்திச்செல்வாரே
கலங்காதே நீ கலங்காதே நீ கலங்காதே
கலங்காதே மனம் திகையாதே கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே
கலங்காதே நீ கலங்காதே கலங்காதே நீ கலங்காதே

1
செங்கடலும் உன்னைக் கண்டு அலைபுரண்டு வந்தாலும்

யோர்தானும் உன்னைக் கண்டு கரை புரண்டு வந்தாலும்
யோர்தானும் உன்னைக் கண்டு கரை புரண்டு வந்தாலும்
கலங்காதே மனம் திகையாதே கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே
கலங்காதே நீ கலங்காதே கலங்காதே நீ கலங்காதே
2
சிங்கத்தின் கெபிக்குள்ளே உன்னைத்தூக்கிப் போட்டாலும்

எரிகின்ற சூளையிலே உன்னைத்தூக்கி எறிந்தாலும்
எரிகின்ற சூளையிலே உன்னைத்தூக்கி எறிந்தாலும்
கலங்காதே மனம் திகையாதே கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உன்னை விடுவிப்பரே
கலங்காதே நீ கலங்காதே கலங்காதே நீ கலங்காதே
3
யேசபேலும் உன்னைக் கண்டு எதிர்த்து வந்தாலும்

ஆமானும் உன்னைக்கண்டு கலகம் தான் செய்தாலும்
ஆமானும் உன்னைக்கண்டு கலகம் தான் செய்தாலும்
கலங்காதே மனம் திகையாதே கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உன்னை உயர்த்திடுவாரே
கலங்காதே நீ கலங்காதே கலங்காதே நீ கலங்காதே
4
கேரீத்தும் உன்னைக் கண்டு வற்றிதான் போனாலும்

காகம் உனக்கு அப்பம் தான் கொடாமல் போனாலும்
காகம் உனக்கு அப்பம் தான் கொடாமல் போனாலும்
கலங்காதே மனம் திகையாதே கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உன்னை போஷிப்பாரே
கலங்காதே நீ கலங்காதே கலங்காதே நீ கலங்காதே
5
எரிகோ உன்னைக் கண்டு எதிர்த்து நின்றாலும்

வெள்ளம் போல சாத்தானும் உன் எதிரே வந்தாலும்
வெள்ளம் போல சாத்தானும் உன் எதிரே வந்தாலும்
கலங்காதே மனம் திகையாதே கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உனக்கு உதவி செய்வார்
கலங்காதே நீ கலங்காதே கலங்காதே நீ கலங்காதே
அழைத்தவர் உன்னை நடத்திச்செல்வாரே
கலங்காதே நீ கலங்காதே நீ கலங்காதே
அழைத்தவர் உன்னை நடத்திச்செல்வாரே
கலங்காதே நீ கலங்காதே நீ கலங்காதே
அழைத்தவர் உன்னை நடத்திச்செல்வாரே | Azhaithavar Unnai Nadathiselvarae / Azhaiththavar Unnai Nadaththiselvarae | Lucas Sekar