athisayamaanavar

அதிசயமானவர் | Athisayamaanavar / Athisayamanavar / Adhisayamaanavar / Adhisayamanavar

இருளில் இருகின்ற ஜனங்கள் ஒரு
பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்
மரண இருளின் தேச குடிகள் ஒரு
வெளிச்சம் பிரகாசிக்கப் பார்த்தார்கள்

ஒரு பாலகன் பிறந்தாரே
நம் வாழ்வில் உதித்தாரே
பிதா குமாரனை கொடுத்தாரே
நமக்காய் அவர் ஈந்தாரே

அவர் நாமம் அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
அவர் அற்புதங்களின் அரசனவர் அருமை இரட்சகர்
வல்லமை தேவா நித்திய பிதா
சமாதான பிரபு எங்களின் ராஜா

அவர் நாமம் அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
அவர் அற்புதங்களின் அரசனவர்

1
இம்மானுவேல் என்று அழைக்கப்பட்டார்
என்றேன்றும் என்னோடு இருப்பேன் என்றார்
என் பாவங்களை நீக்கி என்னை இரட்சித்தார்
மகிழ்ச்சியினால் வாழ்வை இடைகட்டினார்

அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்
இன்ப இனிய நாமம்
எல்லா நாமத்திலும் மேலான நாமம்
இயேசுவின் நாமம்

அவர் நாமம் அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
அவர் அற்புதங்களின் அரசனவர் அருமை இரட்சகர்
அவர் நாமம் அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
அவர் அற்புதங்களின் அரசனவர் அருமை இரட்சகர்

2
நொறுங்குண்ட மனதிற்கு காயம் கட்டினார்
கட்டுண்டவர்களை கட்டவிழ்த்தார்
சிறைப்பட்டவர்களை விடுவித்தார்
துயரம் அடைந்தோர்க்கு ஆறுதல் செய்தார்

எல்லா ஒடுங்கின ஆவிக்கு பதிலாக
துதியின் உடையை கொடுத்தார்
இயேசு பிறப்பினால் எல்லா ஜனத்திற்கும்
சமாதனம் தந்தார்

அவர் நாமம் அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
அவர் அற்புதங்களின் அரசனவர் அருமை இரட்சகர்
வல்லமை தேவா நித்திய பிதா
சமாதான பிரபு எங்களின் ராஜா

அவர் நாமம் அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
அவர் அற்புதங்களின் அரசனவர் அருமை இரட்சகர்

Athisayamaanavar / Athisayamanavar / Adhisayamaanavar / Adhisayamanavar | Tom D’Mel

Don`t copy text!