asthibaram

இயேசு என் அஸ்திபாரம் / Yesu En Asthibaaram / Yesu En Asthibaram / Yesu En Asthi Paaram

இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்

1
என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவை
என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே

இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்

2
பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்
அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்

இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்

3
வியாதியால் எந்தனது காயம் கெட்டுப் போயினும்
மாயத்தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார்

4
லோகம் என்னை எதிர்த்து போவென்று சொல்லிடினும்
சோகம் அடைவேனோ என் ஏகன் எனக்கிருக்க

இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்

5
என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல் வந்தாலும்
முன்னும் பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார்

இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்

6
பாவத்தால் என்னில் வந்த சாபக்கறைகள் மாற்றி
சோபித நீதியுடை ஆபரணமாய் ஈவார்

இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்

7
ஆசை என் மணவாட்டி ஆக்குவேன் உன்னை எனும்
            நேச உறுதியுரை இயேசு எனக்களித்தார்

இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்

Don`t copy text!