விதைப்பும் அறுப்புமே பூமியின் மீதினில் / Vidhaipumm Arupume Boomeeyin Meedhinil / Vithaippum Aruppumae Boomiyin Meedhinil
விதைப்பும் அறுப்புமே பூமியின் மீதினில் / Vidhaipumm Arupume Boomeeyin Meedhinil / Vithaippum Aruppumae Boomiyin Meedhinil
1
விதைப்பும் அறுப்புமே
பூமியின் மீதினிலே
மாறி மாறி வருமே
பகலும் இரவுமாய் வருடங்கள் மாயமாய்
நழுவியே சென்றிடுமே
சிந்திப்பீர் சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே இன்று பிரதானம்
2
ஒன்று இரண்டென
எத்தனை வருடங்கள்
கனவெனக் கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
தேவப் போரினில் ஈடுபடு
சிந்திப்பீர் சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே இன்று பிரதானம்
3
நாடுகள் நடுவினில்
வாய்ப்புகள் உனக்காக
எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு
வந்து பயன்படுத்து
சிந்திப்பீர் சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே இன்று பிரதானம்
4
ஆழக்கடல்களில்
படகைச் செலுத்திட
கடல்போன்ற தேவையல்லோ
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும்
படகு உன் சாட்சியல்லோ
சிந்திப்பீர் சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே இன்று பிரதானம்