இன்றைத்தினம் உன் அருள் / Indraiththinam Un Arul / Indrithinam Un Arul
இன்றைத்தினம் உன் அருள் / Indraiththinam Un Arul / Indrithinam Un Arul
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் இயேசுநாதையா
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்
அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை
வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் இயேசுநாதையா
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்
1
போன ராவில் என்னைக் கண் பார்த்தாய் பலவிதமாம்
பொல்லா மோசங்களில் தற்காத்தாய்
ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி
ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய்
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் இயேசுநாதையா
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்
2
கையிட்டுக் கொள்ளும் என்றன் வேலை யாவிலுமுன்றன்
கடைக்கண் ணோக்கி அவற்றின் மேலே
ஐயா நின் ஆசீர்வாதம் அருளி என் மனோவாக்கு
மெய்யால் நின் மகிமையே விளங்கும்படி ஒழுக
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் இயேசுநாதையா
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்
3
எத்தனையோ விபத்தோர் நாளே தஞ்சம் நீ என
எளியேன் அடைந்தேன் உன்றன் தாளே
பத்தர் பாலனா எனைப் பண்பாய் ஒப்புவித்தேன் உன்
சித்தம் எனது பாக்கியம் தேவ திருக்குமாரா
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் இயேசுநாதையா
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்
4
பாவ சோதனைகளை வென்று பேயுலகுடல்
பண்ணும் போர்களுக் கெதிர் நின்று
ஜீவ பாதையில் இன்றும் திடனாய் முன்னிட்டுச் செல்ல
தேவ சர்வாயுதத்தைச் சிறக்க எனக் களித்து
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் இயேசுநாதையா
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்