anlaaka

அனலாக இறங்கணுமே / Anlaaga Iranganume / Analaga Iranganume / Anlaaka Iranganume / Analaka Iranganume

அனலாக இறங்கணுமே
மழையாக பொழியுணுமே
காற்றாக தழுவுணுமே
ஊற்றாகி வழியணுமே

ஆவியான தேவனே ஆட்கொள்ளுமே
ஆவியான தேவனே ஆட்கொள்ளுமே

அனலாக இறங்கணுமே
மழையாக பொழியுணுமே

1
மேலறைதனில் நீரே சபையை தொடங்கினீர்
சீஷர் தலையின் மேலே நெருப்பாய் இறங்கினீர்

தழலாய் வாரும் தேவா
என்னில் தீயை மூட்டும் தேவா
தழலாய் வாரும் தேவா
என்னில் தீயை மூட்டும் தேவா

அனலாக இறங்கணுமே,
மழையாக பொழியுணுமே

2
உலர்ந்த எலும்புகள் மீது உயிராய் இறங்கினீர்
உயிர்த்த மனிதரை சேர்த்து படையாய் நிறுத்தினீர்

காற்றாய் வீசும் தேவா
என்னை கனலாய் மாற்றும் தேவா
காற்றாய் வீசும் தேவா
என்னை கனலாய் மாற்றும் தேவா

அனலாக இறங்கணுமே
மழையாக பொழியுணுமே

3
சீனாய் மலையை மூட மேகமாய்
மோசேயோடு கூட முகமுகமாய் பேசினீர்

முகிலாய் மூடும் தேவா
திருமுகத்தைக் காட்டும் தேவா
முகிலாய் மூடும் தேவா
திருமுகத்தைக் காட்டும் தேவா

அனலாக இறங்கணுமே
மழையாக பொழியுணுமே

4
நேசக் கடலின் ஆழம் மூழ்க செய்பவர்
நீச்சல் ஆழம் நோக்கி என்னை இழுத்துச் செல்பவர்

அலையாய் சூழும் தேவா
அன்பின் ஆழம் காட்டும் தேவா
அலையாய் சூழும் தேவா
அன்பின் ஆழம் காட்டும் தேவா

அனலாக இறங்கணுமே
மழையாக பொழியுணுமே
காற்றாக தழுவுணுமே
ஊற்றாகி வழியணுமே

ஆவியான தேவனே ஆட்கொள்ளுமே
ஆவியான தேவனே ஆட்கொள்ளுமே

அனலாக இறங்கணுமே
மழையாக பொழியுணுமே

Don`t copy text!