anbu

எல்லையில்லாத அன்பு | Ellaiillatha Anbu / Ellaiillaatha Anbu

எல்லையில்லாத அன்பு
என்னைக்கொல்லாத அன்பு
நானில்லா பரலோகத்தை
ஒருபோதும் விரும்பா அன்பு

அன்பே அவர் பண்பு
அன்பே அவர் பண்பு
அன்பே அவர் பண்பு
அன்பே அவர் பண்பு

1
நிந்தை போக்க நிந்தை சுமந்தீர்
சிந்தை கெட்டா விந்தை செய்தீர்

தன் இரத்தத்தை தானே சிந்தி
என் மொத்தமும் காத்த
விண்ணவனின் விந்தை சித்தம் அன்புதான்

தன் இரத்தத்தை தானே சிந்தி
என் மொத்தமும் காத்த
விண்ணவனின் விந்தை சித்தம் அன்புதான்

அன்புதான் பூரண அன்புதான்

எல்லையில்லாத அன்பு
என்னைக்கொல்லாத அன்பு
நானில்லா பரலோகத்தை
ஒருபோதும் விரும்பா அன்பு

அன்பே அவர் பண்பு
அன்பே அவர் பண்பு

2
இழப்பை போக்க இழந்தே போனீர்
மந்தை சேர்க்க தந்தை வந்தீர்

என் அண்ணனின் ஏராளத்தை
தன் பாகமும் சேர்த்து கிருபையின்
கலசத்தில் கவிழ்த்ததும் அன்புதான்

என் அண்ணனின் ஏராளத்தை
தன் பாகமும் சேர்த்து கிருபையின்
கலசத்தில் கவிழ்த்ததும் அன்புதான்

அன்புதான் பூரண அன்புதான்

எல்லையில்லாத அன்பு | Ellaiillatha Anbu / Ellaiillaatha Anbu | Andrew Frank | Blessing Ston | Andrew Frank

Don`t copy text!