anbennum

அன்பென்னும் ஆவியால் என்னையும் | Anbennum Aaviyaal Ennaiyum

அன்பென்னும் ஆவியால் என்னையும்
ஆண்டவரை நீர் நிரப்பிடும்
ஆயுள் முழுதும் உம் சேவை செய்ய
ஆண்டவரே என்னை அனுப்பிடும்

1
அழியும் ஜனத்தின் அழுகுரல்
அன்பரே என்னையும் உருக்காதோ
மாளுவோரை மீட்க வந்தவரே
மாண்டிடும் மக்களை மீட்டிடவே
அனுப்பும் என்னையும்
ஆண்டவரே உம்மை வேண்டுகிறேன்

அன்பென்னும் ஆவியால் என்னையும்
ஆண்டவரை நீர் நிரப்பிடும்
ஆயுள் முழுதும் உம் சேவை செய்ய
ஆண்டவரே என்னை அனுப்பிடும்

2
நல்ல போராட்டத்தை போராடி
ஓட்டத்தை முடிக்க உதவுமே
உம்மோடு பாடு சகிக்கவும்
உம நாமத்திற்க்காக மரிக்கவும்
ஆயத்தமே நானும் இப்போ
ஆண்டவரே என்னை ஏற்றுக்கொள்ளும்

அன்பென்னும் ஆவியால் என்னையும்
ஆண்டவரை நீர் நிரப்பிடும்
ஆயுள் முழுதும் உம் சேவை செய்ய
ஆண்டவரே என்னை அனுப்பிடும்

3
அன்பு கூறுவோர்க்கு தேவன் தம்மில்
ஆயத்தம் பண்ணினவைகளை
ஆவியானவரை நானும் காண
திறந்தருளும் என் கண்களை
அல்லேலுயா கீதம் பாடி
ஆண்டவரே உம்மை தொழுகிறேன்

அன்பென்னும் ஆவியால் என்னையும்
ஆண்டவரை நீர் நிரப்பிடும்
ஆயுள் முழுதும் உம் சேவை செய்ய
ஆண்டவரே என்னை அனுப்பிடும்

அன்பென்னும் ஆவியால் என்னையும் | Anbennum Aaviyaal Ennaiyum | D. Augustine Jebakumar / Gospel Echoing Missionary Society Bihar (GEMS Bihar), Bihar, India

Don`t copy text!