amuthan

விண்மீன் பாதை காட்டுது / Vinmeen Paathai Kattuthu / Vinmeen Paadhai Kattudhu / Vinmeen Paathai Kaattuthu / Vinmeen Paadhai Kaattudhu

விண்மீன் பாதை காட்டுது
மின்னல் பூக்கள் பூக்குது
வசனம் வந்தது
வசந்தம் வந்தது
திசைகள் எங்கிலும்
இசைகள் நின்றது

விண்மீன் பாதை காட்டுது

1
பூங்காற்றிலே தேன்சாரல்கள்
பூக்களெலாம் போற்றிப்பாடுது
விண்மீதிலே தூதர்கூட்டமே
தோத்திரங்கள் சாற்றிப்பாடுது
தொழுவினில் துயில்கிறார் பாலகன்
நம்முடன் உள்ளனர் மனுவேல்லவர்

விண்மீன் பாதை காட்டுது
மின்னல் பூக்கள் பூக்குது
வசனம் வந்தது
வசந்தம் வந்தது
திசைகள் எங்கிலும்
இசைகள் நின்றது

விண்மீன் பாதை காட்டுது

2
ரோஜாக்களே வெட்கம் வந்ததோ
சின்னபாலன் செம்மை வண்ணமோ
ராஜாக்களே அச்சம் வந்ததோ
விண்ணின் ராஜா கண்கள் கண்டதோ
மகிழுது புகழுது உள்ளமே
ஒளியினில் நனையுது எங்கள் இல்லமே

விண்மீன் பாதை காட்டுது
மின்னல் பூக்கள் பூக்குது
வசனம் வந்தது
வசந்தம் வந்தது
திசைகள் எங்கிலும்
இசைகள் நின்றது

விண்மீன் பாதை காட்டுது

3
சிம்மாசனம் இல்லாமலே
தாழ்மைக்கோலம் பூண்டு வந்தனர்
உல்லாசமும் உற்சாகமும்
மாந்தருக்கு வேந்தர் தந்தனர்
நடுங்குது ஏரோதின் கொற்றமே
மகிழுது மரியாளின் அன்புசுற்றமே

விண்மீன் பாதை காட்டுது
மின்னல் பூக்கள் பூக்குது
வசனம் வந்தது
வசந்தம் வந்தது
திசைகள் எங்கிலும்
இசைகள் நின்றது

விண்மீன் பாதை காட்டுது

விண்மீன் பாதை காட்டுது / Vinmeen Paathai Kattuthu / Vinmeen Paadhai Kattudhu / Vinmeen Paathai Kaattuthu / Vinmeen Paadhai Kaattudhu | V. C. Gayathri | V.C.Amuthan | R. Selvakumar

Don`t copy text!