மகா அதிசயங்களை / Maha Adhisayangalai / Maha Athisayangalai
மகா அதிசயங்களை / Maha Adhisayangalai / Maha Athisayangalai
1
மகா அதிசயங்களைச்
செய்தென்னைப் பூரிப்பித்து
உபத்திரவத்தின் பாரத்தை
இரக்கமாய்க் கழித்து
ரட்சிக்கிற தயாபரர்
இஸ்தோத்திரிக்கப்பட்டவர்
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி
2
கர்த்தாதி கர்த்தா தேவரீர்
யாவற்றையும் நன்றாக
சிஷ்டித்துத் திட்டம் பண்ணினீர்
என்றும்மைப் பணிவாக
விண் மண் கடல் ஆகாசத்து
சேனைத் திரள்கள் போற்றுது
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி
3
ஆ கேளும் என்தன் துன்பத்தில்
கர்த்தாவைக் கெஞ்சிவந்தேன்
அப்போது ஏற்ற வேளையில்
மகா ரட்சிப்பைக் கண்டேன்
இதற்கென் நாவே கீதம்சொல்
என்னோடெல்லோரும் பாடுங்கள்
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி
4
நான் தேவரீரை என்றைக்கும்
மகிழ்ச்சியாய்த் துதிப்பேன்
நான் உம்மை நித்தநித்தமும்
புகழ்ந்து ஸ்தோத்திரிப்பேன்
என் ஆத்துமமும் தேகமும்
கர்த்தாவே உம்மைப் போற்றவும்
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி
5
மெய்மார்க்கத்தாரே கர்த்தரை
துதித்துக் கொண்டிருங்கள்
அவருடைய நாமத்தை
எந்நேரமும் தொழுங்கள்
பொய்த் தேவர் செவிடூமையர்
கர்த்தா கர்த்தாவே ஆண்டவர்
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி
6
நாம் தெய்வ சன்னிதியிலே
மகா மகிழ்ச்சியாக
வந்துன்னத கர்த்தாவையே
வணக்கம் செய்வோமாக
பராபரனைப் போலே யார்
யாவற்றையும் நன்றாக்கினார்
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி