aaviyum

மரிக்கும் மீட்பர் ஆவியும் / Marikkum Meetpar Aaviyum

1
மரிக்கும் மீட்பர் ஆவியும்
வதைக்கப்பட்ட தேகமும்
என் ஆவி தேகம் உய்யவே
என்றைக்கும் காக்கத்தக்கதே

2
அவர் விலாவில் சாலவும்
வடிந்த நீரும் ரத்தமும்
என் ஸ்நானமாகி பாவத்தை
நிவிர்த்தி செய்யத்தக்கதே

3
அவர் முகத்தின் வேர்வையும்
கண்ணீர் அவஸ்தை துக்கமும்
நியாயத்தீர்ப்பு நாளிலே
என் அடைக்கலம் ஆகுமே

4
அன்புள்ள இயேசு கிறிஸ்துவே
ஒதுக்கை உம்மிடத்திலே
விரும்பித் தேடும் எனக்கும்
நீர் தஞ்சம் ஈந்து ரட்சியும்

5
என் ஆவி போகும் நேரத்தில்
அதை நீர் பரதீசினில்
சேர்த்தென்றும் உம்மைப் போற்றவே
அழைத்துக்கொள்ளும் கர்த்தரே

Don`t copy text!