aavi

நல் ஆவி ஊற்றும் தேவா / Nal Aavi Ootrum Deva

நல் ஆவி ஊற்றும் தேவா
நற்கனி நான் தர நித்தம் துதிபாட
நல் ஆவி ஊற்றும் தேவா

1
பெந்தெகோஸ்தே நாளிலே
உந்தனாவி ஈந்தீரே
இந்த வேளையில் இறங்கிடுவீரே
விந்தை செய் விண் ஆவியே

நல் ஆவி ஊற்றும் தேவா
நற்கனி நான் தர நித்தம் துதிபாட
நல் ஆவி ஊற்றும் தேவா

2
மெத்த அசுத்தன் நானே
சுத்தாவி கொண்டெனையே
சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
சத்திய பரிசுத்தனே

நல் ஆவி ஊற்றும் தேவா
நற்கனி நான் தர நித்தம் துதிபாட
நல் ஆவி ஊற்றும் தேவா

3
ஆவியின் கனி ஒன்பதும்
மேவி நான் தந்திடவும்
ஜீவியமெல்லாம் புவி மீதிலே
சுவிசேஷ பணியாற்றவும்

நல் ஆவி ஊற்றும் தேவா
நற்கனி நான் தர நித்தம் துதிபாட
நல் ஆவி ஊற்றும் தேவா

4
பாவம் செய்யாதிருக்க
பாரில் சாட்சி பகர
பார் மீட்க வந்த பரமனையே
பாரோர்க்கு எடுத்துரைக்க

நல் ஆவி ஊற்றும் தேவா
நற்கனி நான் தர நித்தம் துதிபாட
நல் ஆவி ஊற்றும் தேவா

நல் ஆவி ஊற்றும் தேவா / Nal Aavi Ootrum Deva | Agnes Davidson | Sathy Victor | M. Thomas Thangaraj

நல் ஆவி ஊற்றும் தேவா / Nal Aavi Ootrum Deva | Hema John | M. Thomas Thangaraj

Don`t copy text!