aasirvadhikka

இஸ்ரவேலை ஆசீர்வதிக்க | Isaravelai Aasirvathikka / Isaravelai Aasirvadhikka

இஸ்ரவேலை ஆசீர்வதிக்க தேவனுக்கு பிரியம்
இடம் கொள்ளாமல் போகுமட்டும் ஆசீர்வதிப்பாரே
இஸ்ரவேலை ஆசீர்வதிக்க தேவனுக்கு பிரியம்
இடம் கொள்ளாமல் போகுமட்டும் ஆசீர்வதிப்பாரே

வானத்தின் பலகணி திறந்தே நன்மையால் நிரப்புவார்
பொய் சொல்ல அவர் மனிதரல்லவே
மனம் மாறிடாரே
பொய் சொல்ல அவர் மனிதரல்லவே
மனம் மாறிடாரே

1
ஆபிரகாமின் ஆசீர்வாதம் எங்கள்
தலை மேலே எங்கள் தலை மேலே
ஈசாக்கின் ஆசீர்வாதம் எங்கள்
தலை மேலே எங்கள் தலை மேலே

ஆபிரகாமின் ஆசீர்வாதம் எங்கள்
தலை மேலே எங்கள் தலை மேலே
ஈசாக்கின் ஆசீர்வாதம் எங்கள்
தலை மேலே எங்கள் தலை மேலே

காலதாமதம் ஆனாலும் நாங்கள்
முற்றிலும் சுதந்தரிப்போம்
பஞ்ச காலம் வந்தாலும்
நூறு மடங்காய் பெற்றிடுவோம்

காலதாமதம் ஆனாலும் நாங்கள்
முற்றிலும் சுதந்தரிப்போம்
பஞ்ச காலம் வந்தாலும்
நூறு மடங்காய் பெற்றிடுவோம்

ஆசீர்வாத மழையில் நனைந்திடுவோம்
ஆரோக்ய வாழ்வை பெற்றிடுவோம்
ஆசீர்வாத மழையில் நனைந்திடுவோம்
ஆரோக்ய வாழ்வை பெற்றிடுவோம்

வானத்தின் பலகணி திறந்தே நன்மையால் நிரப்புவார்
பொய் சொல்ல அவர் மனிதரல்லவே
மனம் மாறிடாரே
பொய் சொல்ல அவர் மனிதரல்லவே
மனம் மாறிடாரே

2
யோசேப்பின் ஆசீர்வாதம் எங்கள்
தலை மேலே எங்கள் தலை மேலே
தானியேலின் ஆசீர்வாதம் எங்கள்
தலை மேலே எங்கள் தலை மேலே

யோசேப்பின் ஆசீர்வாதம் எங்கள்
தலை மேலே எங்கள் தலை மேலே
தானியேலின் ஆசீர்வாதம் எங்கள்
தலை மேலே எங்கள் தலை மேலே

ஏற்றக்காலத்தில் உயர்த்திடுவார்
எம்மை தலைவர்களாக்கிடுவார்
மறைபொருள்கள் யாவையும்
தரிசனமாய் தந்திடுவார்

ஏற்றக்காலத்தில் உயர்த்திடுவார்
எம்மை தலைவர்களாக்கிடுவார்
மறைபொருள்கள் யாவையும்
தரிசனமாய் தந்திடுவார்

எதிராளிகள் தாழ்த்தி உயர்த்திடுவார்
நிலைவரமான ஆவியை தந்திடுவார்
எதிராளிகள் தாழ்த்தி உயர்த்திடுவார்
நிலைவரமான ஆவியை தந்திடுவார்

வானத்தின் பலகணி திறந்தே நன்மையால் நிரப்புவார்
பொய் சொல்ல அவர் மனிதரல்லவே
மனம் மாறிடாரே
பொய் சொல்ல அவர் மனிதரல்லவே
மனம் மாறிடாரே

இஸ்ரவேலை ஆசீர்வதிக்க தேவனுக்கு பிரியம்
இடம் கொள்ளாமல் போகுமட்டும் ஆசீர்வதிப்பாரே
இஸ்ரவேலை ஆசீர்வதிக்க தேவனுக்கு பிரியம்
இடம் கொள்ளாமல் போகுமட்டும் ஆசீர்வதிப்பாரே

வானத்தின் பலகணி திறந்தே நன்மையால் நிரப்புவார்
பொய் சொல்ல அவர் மனிதரல்லவே
மனம் மாறிடாரே
பொய் சொல்ல அவர் மனிதரல்லவே
மனம் மாறிடாரே

இஸ்ரவேலை ஆசீர்வதிக்க | Isaravelai Aasirvathikka / Isaravelai Aasirvadhikka | Celin Joel C, Joel Thomasraj | Alwyn M | Celin Joel C

Don`t copy text!