aasai

விண் வாழ்வில் ஆசை வைத்தல்ல / Vin Vaalvil Aasai Vaiththalla / Vin Valvil Aasai Vaiththalla

1         
விண் வாழ்வில் ஆசை வைத்தல்ல
நித்திய சாவையே
நான் அஞ்சியல்ல ஆண்டவா
நேசிப்பேன் உம்மையே

2        
மனுக்குலம் அனைத்தையும்
உம் குரூசில் அணைத்தீர்
எனக்காய் ஆணி ஈட்டியும்
நிந்தையும் சகித்தீர்

3        
சத்துரு நீசன் எனக்காய்
சகித்தீர் நாதரே
இரத்த வேர்வை வேதனை
வல் துக்கம் சாவுமே

4        
என் திவ்விய நாதர் இயேசுவை
நரக அச்சமும்
நன் மோட்ச ஆசையும் அற்றே
நேசிப்பேன் முற்றிலும்

5        
எவ்வீவும் எதிர்நோக்கிடேன்
பிரதி பலனும்
என்னை மா அன்பா நேசித்தீர்
நேசிப்பேன் நீசனும்

6        
என் சுவாமி நித்திய வேந்தரும்
நீர் தாமே ஆசையால்
என்றென்றும் உம்மை நேசித்துப்
புகழ்வேன் பாடலால்    

Don`t copy text!