மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ / Malaimaa Nadhio Migu Alzh Kadalo / Malaimaa Nadhiyo Migu Aal Kadalo
மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ / Malaimaa Nadhio Migu Alzh Kadalo / Malaimaa Nadhiyo Migu Aal Kadalo
மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
மருள் சூழும் கானக வனமோ எங்கும்
மீட்பர் சிலுவை சுமப்பேனே
1
பள்ளம் மேடு தடை தாண்டியே
பசாசின் கண்ணிக்கு நீங்கியே
உள்ளார்வமுடன் விண் பார்வையுடன் நான்
மெள்ள மெள்ள நடந்தே எனின்
மீட்பர் சிலுவை சுமப்பேனே
மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
மருள் சூழும் கானக வனமோ எங்கும்
மீட்பர் சிலுவை சுமப்பேனே
2
இன்னல் துயர் பிணி வாதையில்
ஈனரெனைத் தாக்கும் வேளையில்
துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே நான்
தூயன் பாதையில் ஊர்ந்தே அவர்
தூயச் சிலுவை சுமப்பேனே
மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
மருள் சூழும் கானக வனமோ எங்கும்
மீட்பர் சிலுவை சுமப்பேனே
3
பூலோக மேன்மை நாடிடேன்
புவிமேவும் செல்வம் தேடிடேன்
சீலன் சிலுவை சிறியேன் மேன்மை என்
ஜீவன் வழி மறை இயேசுவே அவர்
ஜீவ சிலுவை சுமப்பேனே
மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
மருள் சூழும் கானக வனமோ எங்கும்
மீட்பர் சிலுவை சுமப்பேனே