aadhaaramae

என் ஆதாரமே / En Aadhaarame / En Aadharame / En Aadhaaramae / En Aadharamae / கருவினிலே என்னை கண்டவரே / Karuvinile Ennai Kandavare / Karuvinile Ennai Kandavarae / Karuvinilae Ennai Kandavare / Karuvinilae Ennai Kandavarae

கருவினிலே என்னை கண்டவரே
நீரே என் ஆதாரமே
கருவினிலே என்னை கண்டவரே
நீரே என் ஆதாரமே

1
யார் என்னை மறந்தாலும்
யார் என்னை வெறுத்தாலும்
நீர் என்னை என்றும் மறவீரே
யார் என்னை பகைத்தாலும்
யார் என்னை சபித்தாலும்
ஒருபோதும் என்னை மறவீரே

ஆயிரம் பதினாயிரம் அணுகாது
இன்னல்கள் துன்பங்கள் நெருங்காது
ஆயிரம் பதினாயிரம் அணுகாது
இன்னல்கள் துன்பங்கள் நெருங்காது

யேகோவா தேவன் நீர் என்னோடு
யேகோவா தேவன் நீர் என்னோடு

2
தாயின் அன்பு மறந்தாலும்
தந்தை அன்பு குறைந்தாலும்
உம் அன்பில் மாற்றம் இல்லையே
உறவுகள் உதறினாலும்
உயிர் நண்பன் பிரிந்தாலும்
பிரியா உம் சிநேகம் போதுமே

காயங்கள் பல நூறு அடைந்தாலும்
கண்ணீரே உணவாக அமைந்தாலும்
காயங்கள் பல நூறு அடைந்தாலும்
கண்ணீரே உணவாக அமைந்தாலும்

காக்கும் வல்ல தேவன் நீர் என்னோடு
காக்கும் வல்ல தேவன் நீர் என்னோடு

3
எதிரிகள் சூழ்க்கையிலே
கெர்ஜித்து நிற்கையிலே
மதிலாக நீர் என்னை காத்தீரே
என் சார்பில் நீர் நின்று
யுத்தத்தில் ஜெயம் தந்து
கன்மலை மேல் உயர்த்தி வைத்தீரே

உம்மாலே சேனைக்குள் பாய்வேனே
உம்மாலே மதிலையும் தாண்டுவேன்
உம்மாலே சேனைக்குள் பாய்வேனே
உம்மாலே மதிலையும் தாண்டுவேன்

சர்வ வல்ல தேவன் உம் பெலனாலே
சர்வ வல்ல தேவன் உம் பெலனாலே

கருவினிலே என்னை கண்டவரே
நீரே என் ஆதாரமே
கருவினிலே என்னை கண்டவரே
நீரே என் ஆதாரமே

நீரே என் ஆதாரமே
நீரே என் ஆதாரமே

நீரே என் ஆதாரமே

என் ஆதாரமே / En Aadhaarame / En Aadharame / En Aadhaaramae / En Aadharamae / கருவினிலே என்னை கண்டவரே / Karuvinile Ennai Kandavare / Karuvinile Ennai Kandavarae / Karuvinilae Ennai Kandavare / Karuvinilae Ennai Kandavarae | Nova Edwin

Don`t copy text!