உலக

பொன் மங்கி நிறமும் மாறி / Pon Mangi Niramum Maari

பொன் மங்கி நிறமும் மாறி
அழிந்து போகுமானால்
இரும்பின் நிலை என்ன ஐயோ
இரும்பின் நிலை என்ன

நீதிமானே இரட்சிக்கப்படுதல்
அரிய செயல் என்றால்
மனிதனின் நிலை என்ன உலக
மனிதனின் நிலை என்ன

1
மோசே என்னும் தேவ மனிதன்
பசும்பொன் போலவே விளங்கினும்
கானான் போகவில்லையே அவன்
கானான் போகவில்லையே

நீயும் உன்னையே தேவப் பிள்ளையே
நிற்கிறதாக எண்ணுகிறாயோ

நியாயத் தீர்ப்பிலே கோதுமை
பறக்க பதர் எம்மாத்திரம்
நியாயத் தீர்ப்பிலே கோதுமை
பறக்க பதர் எம்மாத்திரம்

பொன் மங்கி நிறமும் மாறி
அழிந்து போகுமானால்
இரும்பின் நிலை என்ன ஐயோ
இரும்பின் நிலை என்ன

நீதிமானே இரட்சிக்கப்படுதல்
அரிய செயல் என்றால்
மனிதனின் நிலை என்ன உலக
மனிதனின் நிலை என்ன

2
காலம் இனியும் செல்லாதே
கடைசி செய்தியை அறிவிப்பாயே
சோர்ந்து போகாமலே மனம்
சோர்ந்து போகாமலே

ஆவியானவர் துணை செய்வார்
ஆத்தும ஆதாயம் பெற்றிடுவாய்

கிறிஸ்துவை உடையவன்
பேசாவிட்டால் கல்கள் கூப்பிடுமே
கிறிஸ்துவை உடையவன்
பேசாவிட்டால் கல்கள் கூப்பிடுமே

பொன் மங்கி நிறமும் மாறி
அழிந்து போகுமானால்
இரும்பின் நிலை என்ன ஐயோ
இரும்பின் நிலை என்ன

நீதிமானே இரட்சிக்கப்படுதல்
அரிய செயல் என்றால்
மனிதனின் நிலை என்ன உலக
மனிதனின் நிலை என்ன

Don`t copy text!