ஆன

ஆத்துமாக்கள் மேய்ப்பரே / Aaththumaakkal Meipparae / Aathumaakkal Meipparae / Aaththumaakal Meipparae / Aaththumaakal Meipparae

1
ஆத்துமாக்கள் மேய்ப்பரே
மந்தையைப் பட்சிக்கவும்
சாத்தான் பாயும் ஓநாய் போல்
கிட்டிச்சேரும் நேரமும்
நாசமோசம் இன்றியே
காரும் நல்ல மேய்ப்பரே

2
பணம் ஒன்றே ஆசிக்கும்
கூலியாளோ ஓடுவோன்
காவல் இன்றிக் கிடக்கும்
தொழுவத்தின் வாசல்தான்
வாசல் காவல் ஆன நீர்
மந்தைமுன் நின்றருள்வீர்

3
கெட்டுப்போன யூதாஸின்
ஸ்தானத்திற்குத் தேவரீர்
சீஷர் சீட்டுப்போடவே
மத்தியா நியமித்தீர்
எங்கள் ஐயம் யாவிலும்
கர்த்தரே நடத்திடும்

4
புது சீயோன் நகரில்
பக்தர் வரிசையிலே
நிற்கும் மத்தியாவோடும்
நாங்கள் சேரச் செய்யுமே
கண் குளிர உம்மையும்
காணும் பாக்கியம் அருளும்

Don`t copy text!