என்ன துன்ப நாள் | Enna Thunba Naal

என்ன துன்ப நாள் இயேசென்னோடில்லா நாள்
இன்பமே தோன்றாத நாளாம் என் வாழ்வு நாள்
இன்பமே தோன்றாத நாளாம்

ஒளிமங்கிப் போன நாள் மகிழொழிந்திட்ட நாள்
ஒளிமங்கிப் போன நாள் மகிழொழிந்திட்ட நாள்
எழில் இயேசென்னோடிருந்தால் எனக்கது இன்ப நாள்
எழில் இயேசென்னோடிருந்தால் எனக்கது இன்ப நாள்

என்ன துன்ப நாள் இயேசென்னோடில்லா நாள்
இன்பமே தோன்றாத நாளாம் என் வாழ்வு நாள்
இன்பமே தோன்றாத நாளாம்

1
அவர் பேர் சுகந்தமே அவர் சத்தம் இன்பமே
அவர் பேர் சுகந்தமே அவர் சத்தம் இன்பமே
அவர் முன்னென் துயர் போமோ மா நேர்மையே
அவர் முன்னென் துயர் போமோ

பயமொன்று மில்லையே பரனடி நிற்கவே
பயமொன்று மில்லையே பரனடி நிற்கவே
தயவுள்ள இயேசு எந்தன் தாபரம் இதுண்மையே
தயவுள்ள இயேசு எந்தன் தாபரம் இதுண்மையே

என்ன துன்ப நாள் இயேசென்னோடில்லா நாள்
இன்பமே தோன்றாத நாளாம் என் வாழ்வு நாள்
இன்பமே தோன்றாத நாளாம்

2
கண்டு நான் மகிழ்வேன் கர்த்தன் முகம் தனையே
கண்டு நான் மகிழ்வேன் கர்த்தன் முகம் தனையே
கொண்டு வைத்தேனெனதெல்லாம் என் நாதன் முன்
கொண்டு வைத்தேனெனதெல்லாம் என் நாதன் முன்

ஒன்றுமே இவர்க்கு ஒப்பில்லை எனக்கு
ஒன்றுமே இவர்க்கு ஒப்பில்லை எனக்கு
என்றும் இன்பம் தந்து இயேசு என்னில் வசிப்பதற்கு
என்றும் இன்பம் தந்து இயேசு என்னில் வசிப்பதற்கு

என்ன துன்ப நாள் இயேசென்னோடில்லா நாள்
இன்பமே தோன்றாத நாளாம் என் வாழ்வு நாள்
இன்பமே தோன்றாத நாளாம்

3
ஆ எந்தன் தேவனே நானுந்தன் தாசனே
ஆ எந்தன் தேவனே நானுந்தன் தாசனே
நீரெனது தஞ்சமானால் தயக்கமேன்
நீரெனது தஞ்சமானால் தயக்கமேன்

கெஞ்சுறேன் நானே கிருபை கூர்ந்தையனே
கெஞ்சுறேன் நானே கிருபை கூர்ந்தையனே
புன்னகையோடென்னை ஆண்டு பொற்பதி சேர் மெய்யனே
புன்னகையோடென்னை ஆண்டு பொற்பதி சேர் மெய்யனே

என்ன துன்ப நாள் இயேசென்னோடில்லா நாள்
இன்பமே தோன்றாத நாளாம் என் வாழ்வு நாள்
இன்பமே தோன்றாத நாளாம்

ஒளிமங்கிப் போன நாள் மகிழொழிந்திட்ட நாள்
ஒளிமங்கிப் போன நாள் மகிழொழிந்திட்ட நாள்
எழில் இயேசென்னோடிருந்தால் எனக்கது இன்ப நாள்
எழில் இயேசென்னோடிருந்தால் எனக்கது இன்ப நாள்

என்ன துன்ப நாள் இயேசென்னோடில்லா நாள்
இன்பமே தோன்றாத நாளாம் என் வாழ்வு நாள்
இன்பமே தோன்றாத நாளாம்

என்ன துன்ப நாள் | Enna Thunba Naal | Tamil Arasi / El Shaddai Gospel Church (EGC), Kuwait | Jesus Redeems, Nalumavadi, Thoothukudi, Tamil Nadu, India

Don`t copy text!