சீர் ஆவியால் இரக்கமாய் / Seer Aaviyaal Irakkamaai / Seer Aaviyal Irakkaamai
1
சீர் ஆவியால் இரக்கமாய்
உண்டான வேதமே
ஒப்பற்ற ஞானமுள்ளதாய்
நமக்குண்டாயிற்றே
2
அதில் பிறக்கும் போதனை
விளக்கைப்போலவே
நற்கதி சேரும் மார்க்கத்தை
விளக்கிக் காட்டுமே
3
இருள் நிறைந்த பூமியில்
அதே என் வெளிச்சம்
பரத்தை நோக்கிப் போகையில்
அதே நட்சத்திரம்
4
கர்த்தாவின் அருளால் அதே
மகா ஈவாயிற்று
அதைக்குறித்தென் நெஞ்சமே
சந்தோஷமாயிரு