பவனி செல்கின்றார் ராசா / Pavani Selginrar Raasaa / Bavani Selkirar Rasa / Pavani Selkintrar Raasaa
பவனி செல்கின்றார் ராசா  நாம்
பாடிப் புகழ்வோம் நேசா
அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்
பவனி செல்கின்றார் ராசா  நாம்
பாடிப் புகழ்வோம் நேசா
1
எருசலேமின் பதியே  சுரர்
கரிசனையுள்ள நிதியே
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே
பவனி செல்கின்றார் ராசா  நாம்
பாடிப் புகழ்வோம் நேசா
2
பன்னிரண்டு சீடர் சென்று  நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம் சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத
பவனி செல்கின்றார் ராசா  நாம்
பாடிப் புகழ்வோம் நேசா
3
குருத்தோலைகள் பிடிக்க பாலர்
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற
பவனி செல்கின்றார் ராசா  நாம்
பாடிப் புகழ்வோம் நேசா

Thanks for your help. Great help. From mizpah Prayer centre…. coimbatore… India…Rev Francis Selven
You are welcome. Thanks for your feedback. Please share Tamil Christian Song Book.com with more people so that more people can be blessed.