பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி / Parisuthar Kootam Eyesuvai Potri / Parisuthar Kootam Yesuvai Potri
1
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட
பரமானந்த கீதமங்கெழும்ப
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
நான் அங்கிருப்பேனே நான் அங்கிருப்பேனே
நான் அங்கிருப்பேனே என் இயேசுவோடே
2
ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
அண்டினோரெவரும் அவரைச் சேர
அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
நான் அங்கிருப்பேனே நான் அங்கிருப்பேனே
நான் அங்கிருப்பேனே என் இயேசுவோடே
3
பேதுரு பவுலும் யோவானு மங்கே
பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும்
இரத்தச் சாட்சிகளும் திரளாய்க் கூட
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
நான் அங்கிருப்பேனே நான் அங்கிருப்பேனே
நான் அங்கிருப்பேனே என் இயேசுவோடே
4
ஜெகத்தில் சிலுவை சுமந்தோ ரெல்லாம்
திருமுடி யணிந்திலங்கிடவும்
தேவசேயர்களா யெல்லாரும் மாற
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
நான் அங்கிருப்பேனே நான் அங்கிருப்பேனே
நான் அங்கிருப்பேனே என் இயேசுவோடே
5
சோதனைகளை வென்றவர் எவரும்
துன்பம் தொல்லைதனை சகித்தவரும்
ஜோதி ரூபமாய் சொர்லோகில் ஜொலிக்க
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
நான் அங்கிருப்பேனே நான் அங்கிருப்பேனே
நான் அங்கிருப்பேனே என் இயேசுவோடே
6
கன்னிகையைப் போல் கர்த்தன் சபையன்று
மன்னர் மணாளனேசுவை மணந்து
பின்னும் சொல்லரிதாம் நிலைருசிக்க
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
நான் அங்கிருப்பேனே நான் அங்கிருப்பேனே
நான் அங்கிருப்பேனே என் இயேசுவோடே
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி /Parisuthar Kootam Eyesuvai Potri / Parisuthar Kootam Yesuvai Potri | Premila Simon / Carmel Ministries, Purasaiwalkam, Chennai, Tamil Nadu, India | A. Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India