பாவிக்காய் மரித்த இயேசு / Paavikkaai Mariththa Yesu / Paavikaai Maritha Yesu / Paavikkai Mariththa Yesu / Paavikai Maritha Yesu
1
பாவிக்காய் மரித்த இயேசு
மேகமீதிறங்குவார்
கோடித் தூதர் அவரோடு
வந்து ஆரவாரிப்பார்
அல்லேலூயா
கர்த்தர் பூமி ஆளுவார் 
2    
தூய வெண் சிங்காசனத்தில்
வீற்று வெளிப்படுவார்
துன்புறுத்திச் சிலுவையில்
கொன்றோர் இயேசுவைக் காண்பார்
திகிலோடு
மேசியா என்றறிவார் 
3    
அவர் தேகம் காயத்தோடு
அன்று காணப்படுமே
பக்தர்கள் மகிழ்ச்சியோடு
நோக்குவார்கள் அப்போதே
அவர் காயம்
தரும் நித்திய ரட்சிப்பை 
4    
உம்மை நித்திய ராஜனாக
மாந்தர் போற்றச் செய்திடும்
ராஜரீகத்தை அன்பாக
தாங்கி செங்கோல் செலுத்தும்
அல்லேலூயா
வல்ல வேந்தே வந்திடும் 
பாவிக்காய் மரித்த இயேசு / Paavikkaai Mariththa Yesu / Paavikaai Maritha Yesu  / Paavikkai Mariththa Yesu / Paavikai Maritha Yesu