பார் முன்னணை ஒன்றில் / Paar Munnanai Ondril
1
பார் முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
பாலனாம் நம் இயேசு கிடந்தனரே
வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்
காண மின்னிட்டதே வான்வெள்ளிகள் தாம்
2
மா மா எனும் சத்தம் கேட்டு விழிப்பார்
ஆயின் பாலன் இயேசு அழவே மாட்டார்
நான் நேசிக்கும் நாதா நீர் நோக்கிப் பார்ப்பீர்
தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்
3
என் நாதா என்றும் நீர் என்னை நேசிப்பீர்
என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்
உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தே
சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே
பார் முன்னணை ஒன்றில் / Paar Munnanai Ondril | Eben Vincent, Roshan Vincent, Geetha Eben, Anton Vincent
பார் முன்னணை ஒன்றில் / Paar Munnanai Ondril | Sharmini Satgunam