ஒரு சின்னப் பூவாய் / Oru Chinna Poovai / Oru Chinna Poovaai
ஒரு சின்னப் பூவாய்ப் பாரில் பூத்தேன்
ஒரு காகிதமாய்க் காற்றில் மிதந்தேன்
தண்ணீரில்லா நிலத்ததில் விழுந்தேன்
நான் சுவாசமில்லா நிலவில் தனித்தேன்
என் வாழ்வில் நண்பன் நீரே என் ஆத்ம நேரும் நீரே
என் காதல் நாயகனே எனதிண்பமே
ஒரு சின்னப் பூவாய்ப் பாரில் பூத்தேன்
ஒரு காகிதமாய்க் காற்றில் மிதந்தேன்
1
உறவுகள் தள்ளி நிற்க என் நண்பர்கள் விலகி நடக்க
ஒரு கவிதையாகிப் போனேன் அதில் களங்கமாக இருந்தேன்
என் நேசர் என் பக்கமிருக்க நான் கவலையைத் தள்ளி உதர
அவர்க் கரத்திலென்னைக் கொடுத்தேன் நான் கவலை மறந்து இருந்தேன்
எந்தன் வாழ்க்கையிலே எந்நாளுமே நன்மை செய்தார்
என் வாழ்வில் நண்பன் நீரே என் ஆத்ம நேரும் நீரே
என் காதல் நாயகனே எனதிண்பமே
ஒரு சின்னப் பூவாய்ப் பாரில் பூத்தேன்
ஒரு காகிதமாய்க் காற்றில் மிதந்தேன்
2
கவலைகள் என்னில் பெருக ஏக்கங்கள் என்னை சூழ இந்த
வாழ்க்கை கசப்பாய் மாற நான் சாவை தேடி ஓட
தேற்றிட யாரும் இல்லை என்னைத் தூக்கிட யாரும் இல்லை
படுதோல்வியாக இருந்தேன் நான் கேள்வியாகிப் போனேன்
சிலுவையை ஜெயித்தவர் என்னையுமே விடுவித்தார்
என் வாழ்வில் நண்பன் நீரே என் ஆத்ம நேரும் நீரே
என் காதல் நாயகனே எனதிண்பமே
ஒரு சின்னப் பூவாய்ப் பாரில் பூத்தேன்
ஒரு காகிதமாய்க் காற்றில் மிதந்தேன்
தண்ணீரில்லா நிலத்ததில் விழுந்தேன்
நான் சுவாசமில்லா நிலவில் தனித்தேன்
என் வாழ்வில் நண்பன் நீரே என் ஆத்ம நேரும் நீரே
என் காதல் நாயகனே எனதிண்பமே
என் வாழ்வில் நண்பன் நீரே என் ஆத்ம நேரும் நீரே
என் காதல் நாயகனே எனதிண்பமே
என் வாழ்விலே என் நாளுமே
ஒரு சின்னப் பூவாய் / Oru Chinna Poovai / Oru Chinna Poovaai | Trichy Ilayaraja | Vijay | Joseph Francis