ஊதும் தெய்வாவியை / Oodhum Deivaaviyai / Oothum Deivaaviyai
1
ஊதும் தெய்வாவியை
புத்துயிர் நிரம்ப
நாதா என் வாஞ்சை செய்கையில்
உம்மைப் போல் ஆகிட
2
ஊதும் தெய்வாவியை
தூய்மையால் நிரம்ப
உம்மில் ஒன்றாகி யாவையும்
சகிக்க செய்திட
3
ஊதும் தெய்வாவியை
முற்றும் ஆட்கொள்ளுவீர்
தீதான தேகம் மனத்தில்
வானாக்னி மூட்டுவீர்
4
ஊதும் தெய்வாவியை
சாகேன் நான் என்றுமாய்
சதாவாய் வாழ்வேன் உம்மோடு
பூரண ஜீவியாய்
ஊதும் தெய்வாவியை / Oodhum Deivaaviyai / Oothum Deivaaviyai | CSI Christ Church Ambattur, Ambattur, Chennai, Tamil Nadu, India