நோக்கிப்பார் உந்தன் இயேசுவை / Nokkipaar Undhan Yesuvai / Nokkipaar Unthan Yesuvai / Nokkipar Undhan Yesuvai / Nokkipar Unthan Yesuvai
நோக்கிப்பார் உந்தன் இயேசுவை
கோரச் சிலுவை காட்சியை
தேவ மைந்தன் வேதனை
யாவும் உனக்காய் ஏற்றாரே
நோக்கிப்பார் உந்தன் இயேசுவை
1
அழைக்கும் இயேசு பாராயோ
ஆவலாய் மனம் திருந்திடு
அழைக்கும் இயேசு பாராயோ
ஆவலாய் மனம் திருந்திடு
முள்ளில் உதைப்பது கடினமே
உந்தன் இதயம் சிதறுமே
நோக்கிப்பார் உந்தன் இயேசுவை
2
உலகை நீ ஏன் பார்க்கிறாய்
உவகை மாறி சாகிறாய்
உலகை நீ ஏன் பார்க்கிறாய்
உவகை மாறி சாகிறாய்
உண்மை வாழ்வு வேண்டுமா
உன்னில் மாற்றம் தேவையா
நோக்கிப்பார் உந்தன் இயேசுவை
3
உந்தன் ஜீவன் மிஞ்சுமா
சிலுவை தான் இனி தஞ்சமே
உந்தன் ஜீவன் மிஞ்சுமா
சிலுவை தான் இனி தஞ்சமே
இயேசு என்னும் நாமமே
பாவ பரிகாரமே
நோக்கிப்பார் உந்தன் இயேசுவை