நீயுனக்குச் சொந்தமல்லவே / Neeyunakku Sondhamallave / Nee Unakku Sontham Allave / Nee Unakku Sondhamallave

நீயுனக்குச் சொந்தமல்லவே / Neeyunakku Sondhamallave / Nee Unakku Sontham Allave / Nee Unakku Sondhamallave

நீயுனக்குச் சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி
நீயுனக்குச் சொந்தமல்லவே

நீயுனக்குச் சொந்தமல்லவே
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்

நீயுனக்குச் சொந்தமல்லவே

1
சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே திருரத்தம் ரத்தம்
திரு விலாவில் வடியுது பாரே
வலிய பரிசத்தால் கொண்டாரே
வான மகிமை யுனக்கீவாரே

நீயுனக்குச் சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி
நீயுனக்குச் சொந்தமல்லவே

2
இந்த நன்றியை மறந்து போனாயோ யேசுவைவிட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ
சந்த தமுனதிதயங் காயமும்
சாமி கிறிஸ்தினுடைய தல்லவோ

நீயுனக்குச் சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி
நீயுனக்குச் சொந்தமல்லவே

3
பழைய பாவத்தாசை வருகுதோ பசாசின்மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ
அழியும் நிமிஷத் தாசை காட்டியே
அக்கினிக்கடல் தள்ளுவானேன்

நீயுனக்குச் சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி
நீயுனக்குச் சொந்தமல்லவே

4
பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே உலகைவிட்டுப்
பிரியினும் அவர்க்கே மரிப்பாயே
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்
உயர்பதவியில் என்றும் நிலைப்பாய்

நீயுனக்குச் சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி
நீயுனக்குச் சொந்தமல்லவே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!