நரர்க்காய் மாண்ட இயேசுவே / Nararkkaai Maanda Yesuve / Nararkkai Manda Yesuve
1
நரர்க்காய் மாண்ட இயேசுவே
மகத்துவ வேந்தாய் ஆளுவீர்
உம் அன்பின் எட்டா ஆழத்தை
நாங்கள் ஆராயக் கற்பிப்பீர்
2
உம் நேச நாமம் நிமித்தம்
எந்நோவு நேர்ந்தபோதிலும்
சிலுவை சுமந்தே நித்தம்
உம்மைப் பின்செல்ல அருளும்
3
பிரயாணமாம் இவ்வாயுளில்
எப்பாதை நாங்கள் செல்லினும்
போர் ஓய்வு வெய்யில் நிழலில்
நீர் வழித்துணையாயிரும்
4
வெம் பாவக் குணத்தை வென்றே
ஆசாபாசம் அடக்கலும்
உம் அச்சடையாளம் என்றே
நாங்கள் நினைக்கச் செய்திடும்
5
உம் குருசை இன்று தியானித்தே
எவ்வேலையும் தூயதென்றும்
லௌகீக நஷ்டம் லாபமே
என்றெண்ணவும் துணைசெய்யும்
6
உம் பாதம் சேரும் அளவும்
எம் சிலுவையைச் சுமந்தே
உம் சிலுவையால் மன்னிப்பும்
பொற்கிரீடமும் பெறுவோமே
