நம்பி வந்தேன் நம்பி வந்தேன் / Nambi Vandhen Nambi Vandhen / Nambi Vanthen Nambi Vanthen
1
என்னை அழைத்தவர் என் உள்ளம் அறிந்தவர்
உம் பாதம் ஓடி வந்தேன்
சேற்றில் இருந்தென்னை கை தூக்கி எடுத்த
உம் கிருபையை எண்ணி வந்தேன்
நீர் எந்தன் கன்மலை நீர் எந்தன் கோட்டையே
எந்நாளும் உம்மை நான் நம்புவேன்
நீர் எந்தன் கன்மலை நீர் எந்தன் கோட்டையே
எந்நாளும் உம்மை நான் நம்புவேன்
நம்பி வந்தேன் நம்பி வந்தேன்
நம்பி வந்தேன் உம்மையே
நம்பி வந்தேன் ஓடி வந்தேன்
உம் பாதம் ஒன்றே போதுமே
2
மனிதரை நம்பினேன் மனம் நொந்து ஏங்கினேன்
உதறி தள்ளப்பட்டேன்
தனிமையில் கதறினேன் வறுமையால் புலம்பினேன்
உலகத்தால் வெறுக்கப்பட்டேன்
வழிகளை திறந்தவர் அழுகையை துடைத்தவர்
இழந்ததை கொடுத்தவர் என் இயேசுவே
வழிகளை திறந்தவர் அழுகையை துடைத்தவர்
இழந்ததை கொடுத்தவர் என் இயேசுவே
நம்பி வந்தேன் நம்பி வந்தேன்
நம்பி வந்தேன் உம்மையே
நம்பி வந்தேன் ஓடி வந்தேன்
உம் பாதம் ஒன்றே போதுமே
3
சாதனை ஜெயித்தீர் என் சாபத்தை முறித்தீர்
உம் பிள்ளையாய் மாற்றினீரே
என்னை முன் குறைதீர் நீர் எனக்காக மரித்தீர்
என் தேவை எல்லாம் சந்தித்தீர்
மரணத்தை ஜெயித்தீர் விடுதலை கொடுத்தீர்
கழுகு போல் எழும்பிட பெலன் அளித்தீர்
மரணத்தை ஜெயித்தீர் விடுதலை கொடுத்தீர்
கழுகு போல் எழும்பிட பெலன் அளித்தீர்
நம்பி வந்தேன் நம்பி வந்தேன்
நம்பி வந்தேன் உம்மையே
நம்பி வந்தேன் ஓடி வந்தேன்
உம் பாதம் ஒன்றே போதுமே
4
செங்கடல் முன் நின்றும் எதிரிகள் பின் நின்றும்
கை விடாமல் காத்தவரே
வனாந்திர பாதையிலும் தவித்திட்ட நேரத்திலும்
மன்னாவை கொடுத்தவர்
சொன்னதை செய்பவர் நினைத்ததை முடிப்பவர்
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
சொன்னதை செய்பவர் நினைத்ததை முடிப்பவர்
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நம்பி வந்தேன் நம்பி வந்தேன்
நம்பி வந்தேன் உம்மையே
நம்பி வந்தேன் ஓடி வந்தேன்
உம் பாதம் ஒன்றே போதுமே
முழங்கால்கள் முடங்கும் நாவுகள் உரைக்கும்
ஜீவனுள்ள தேவன் நீரே என்று
முழங்கால்கள் முடங்கும் நாவுகள் உரைக்கும்
ஜீவனுள்ள தேவன் நீரே என்று
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்புகிறேன் உம்மையே
நம்புகிறேன் ஓடுகிறேன்
உம் பாதம் ஒன்றே போதுமே
நம்பி வந்தேன் நம்பி வந்தேன்
நம்பி வந்தேன் உம்மையே
நம்பி வந்தேன் ஓடி வந்தேன்
உம் பாதம் ஒன்றே போதுமே
நம்பி வந்தேன் நம்பி வந்தேன் / Nambi Vandhen Nambi Vandhen / Nambi Vanthen Nambi Vanthen | Christopher Prem