மறவாதே மனமே / Maravaadhe Maname / Maravathe Maname / Maravaathey Maname

மறவாதே மனமே / Maravaadhe Maname / Maravathe Maname / Maravaathey Maname

மறவாதே மனமே தேவ சுதனை
மறவாதே மனமே ஒருபொழுதும்

1
திறமதாக உனைத் தேடித் புவியில் வந்து
அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை

மறவாதே மனமே தேவ சுதனை
மறவாதே மனமே ஒருபொழுதும்

2
விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டு
மண்ணில் ஏழையாக வந்த மானுவேலை

மறவாதே மனமே தேவ சுதனை
மறவாதே மனமே ஒருபொழுதும்

3
கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ
மட்டில்லாத பரன் மானிடனான தயவை

மறவாதே மனமே தேவ சுதனை
மறவாதே மனமே ஒருபொழுதும்

4
நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அள்ளிதிவ்
வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும்

மறவாதே மனமே தேவ சுதனை
மறவாதே மனமே ஒருபொழுதும்

5
நிததம் நித்தம் செய்த நிந்தனை பாவங்கள்
அத்தனையும் பொறுத்த அருமை ரட்சகனை

மறவாதே மனமே தேவ சுதனை
மறவாதே மனமே ஒருபொழுதும்

6
வருடம் வருடம் தோறும் மாறப் தமதிரக்கம்
பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை

மறவாதே மனமே தேவ சுதனை
மறவாதே மனமே ஒருபொழுதும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!