மகிழ் கர்த்தாவின் மந்தையே / Magil Karththaavin Mandhaiye / Magizh Karththaavin Mandhaiye / Magil Karthaavin Mandhaiye / Magizh Karthaavin Mandhaiye
1
மகிழ் கர்த்தாவின் மந்தையே
இதோ கெம்பீரத்துடனே
பரத்துக்குள் அதிபதி
எழுந்து போனதால் துதி
2
விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய்
கொண்டாடி மா வணக்கமாய்
பணிந்து இயேசு ஸ்வாமிக்கு
ஆராதனை செலுத்திற்று
3
கர்த்தாதி கர்த்தர் நமக்கு
தலைவரானார் என்பது
பரத்தின் தூதருக்கெல்லாம்
விசேஷித்த சந்தோஷமாம்
4
ஆ இயேசு தெய்வ மைந்தனே
கர்த்தா பர்த்தா முதல்வரே
அடியார் நெஞ்சு உமக்கு
என்றும் ஆதீனம் ஆனது
5
விண்ணோரைப் போல் மண்ணோர்களே
நம் ஆண்டவரை என்றுமே
அன்பாகக் கூடிப் பாடுங்கள்
அவரின் மேன்மை கூறுங்கள்