கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும் / Karththarthaam Engal Thurkkamum / Kartharthaam Engal Thurkkamum
1
கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்
அரண் பலமுமாமே
உண்டாம் இக்கட்டனைத்தையும்
போக்குவார் அவர்தாமே
பொல்லாங்கனின் சினம்
இப்போது மா விஷம்
துஷ்டமும் சூதையும்
அணிந்து உறுமும்
நிகர் புவியில் இல்லை
2
எதற்கு நாங்கள் வல்லவர்
இந்நீசர் சக்தியற்றோர்
எங்களுக்காய் வேறொருவர்
போர் செய்வதற்கேற்பட்டோர்
ஆர் இயேசு கிறிஸ்துதான்
ஆ இந்தப் பலவான்
ஆம் எங்கள் ரட்சகர்
சேனாபதி அவர்
ஜெயிப்பார் அவர்தாமே
3
விழுங்க வரும் பேய்களால்
புவி நிரம்பினாலும்
பயப்படோம் கர்த்தாவினால்
எதிர்த்து நிற்கக்கூடும்
இருளின் பிரபு
சீறினாலும் அது
நசுக்கப்பட்ட பேய்
தள்ளுண்ணத் தீர்ந்ததே
ஓர் சொல்லினால் ஒழியும்
4
பகைஞர் தெய்வ வார்த்தையை
பகைத்தும் அது நிற்கும்
கர்த்தர் சகாயர் அவர் கை
வரம் தந்தாதரிக்கும்
மாற்றார்கள் யாவையும்
ஜீவனையேதானும்
வாங்கினால் கேடாமோ
இராஜ்ஜியமல்லோ
எங்களுக்கே யிருக்கும்
கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும் / Karththarthaam Engal Thurkkamum / Kartharthaam Engal Thurkkamum | Holy Trinity Church Choir Fellowship / CSI Holy Trinity Church, Moovarasanpet, Chennai, Tamil Nadu, India