கர்த்தர் சமீபமாம் என்றே / Karththar Samibamaam Endre / Karthar Samibamaam Endre

கர்த்தர் சமீபமாம் என்றே / Karththar Samibamaam Endre / Karthar Samibamaam Endre

1   
கர்த்தர் சமீபமாம் என்றே
யோர்தான் நதியின் அருகே
முன் தூதன் யோவான் கூறிடும்
நற்செய்தி கேட்க விழியும்

2   
விருந்தும் போன்றே நாதனார்
நம் நெஞ்சில் வந்து தங்குவார்
அவர்க்கு வழி ஆகவும்
அகத்தைச் சுத்தம் பண்ணுவோம்

3   
நாதா நீர் எங்கள் தஞ்சமும்
ரட்சிப்பும் ஜீவ கிரீடமும்
உம் அருள் அற்ற யாவரும்
உலர்வார் புஷ்பம் போலவும்

4   
நோய் கொண்டோர் சொஸ்தமாகவும்
வீழ்ந்தோர் கால் ஊன்றி நிற்கவும்
பூலோகம் சீர் அடையவும்
எழும்பி நீர் பிரகாசியும்

5   
உமக்கு சாட்சி கூறியே
வழி ஆயத்தமாகவே
யோவான் ஸ்நானன்போல் நாங்களும்
உம் அருள் பெறச் செய்திடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in: ,


Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!