கர்த்தாவின் சுத்த ஆவியே / Karththaavin Suththa Aaviye / Karthaavin Sutha Aaviye / Karththavin Suththa Aaviye / Karthavin Sutha Aaviye
1
கர்த்தாவின் சுத்த ஆவியே
நீர் எங்கள் ஆத்துமாவிலே
இறங்கி வாசம் பண்ணும்
பரம ஜோதியாகிய
உம்மாலே நாங்கள் சீர்ப்பட
தெளிந்த நெஞ்சும் கண்ணும்
தந்து வந்து
மெய் ஜெபத்தை நற்குணத்தை
போதித்தீயும்
மெய்ச் சந்தோஷத்தை அளியும்
2
நீர் போதிக்கும் நல் வார்த்தையே
எப்போதும் எங்கள் நெஞ்சிலே
மெய்த் தீபமாவதாக
பிதா சுதன் இருவரால்
இறங்கும் உம்மையும் அதால்
திரியேக தெய்வமாக
நல்ல வல்ல
கனிவோடும் பணிவோடும்
போற்றிப் பாடும்
வாக்கை எங்களுக்குத் தாரும்
3
நல்லோர் அடைகிற எல்லா
மெய் ஞானத்துக்கும் காரணா
நீர் எங்கள்மேலே வாரும்
மற்றோருக்கும் சன்மார்க்கத்தை
அன்பாகக் காட்டும் ஆவியை
நீர் எங்களுக்குத் தாரும்
நாட்டில் காட்டில்
தேசமெங்கும் பொய் அடங்கும்
நாள் உண்டாக
உம்மால் மெய் பலப்பதாக
4
வழித்துணையாம் கர்த்தரே
நல் யோசனை அறியோமே
நீரே வழியைக் காட்டும்
எல்லா உபத்ரவத்திலும்
திடம் நிலைவரத்தையும்
அளித்து முசிப்பார்றும்
வாரும் பாரும்
கை சலித்துக் கட்டுவிட்டு
போன யாவும்
சீர்ப்பட சகாயம் தாரும்
5
ஜீவாவி நாங்கள் இயேசுவின்
பிரிய சுவிசேஷத்தின்
பேரின்பத்தால் நிறைந்து
ரட்சிப்பின் நீளம் அகலம்
தெய்வன்பின் ஆழம் உயரம்
ஏதென்றுணர்வடைந்து
பாவம் சாபம்
வென்ற கர்த்தா எங்கள் பர்த்தா
என்றறியும்
திட நிச்சயம் அளியும்
6
கற்போடு எங்கள் நாட்களை
கழிக்க எங்கள் ஆவியை
பலப்படுத்த வாரும்
பொல்லாத ஆசை இச்சையை
விலக்கி அது எங்களை
தீண்டாதபடி காரும்
வான ஞான
வாழ்வை நாடும் சீரைத் தாரும்
மோட்சம் காட்டும்
அதால் எங்கள் நெஞ்சை ஆற்றும்