கர்த்தா உம் மாட்சி கரத்தால் / Karththaa Um Maatchi Karaththaal / Karthaa Um Maatchi Karathaal / Karththa Um Matchi Karathal / Kartha Um Matchi Karathal

கர்த்தா உம் மாட்சி கரத்தால் / Karththaa Um Maatchi Karaththaal / Karthaa Um Maatchi Karathaal / Karththa Um Matchi Karathal / Kartha Um Matchi Karathal

1   
கர்த்தா உம் மாட்சி கரத்தால்
நோய் சாவும் நீங்கிற்றே
சுத்தாங்க சுகம் ஜீவனும்
உம் வார்த்தை நல்கிற்றே
அந்தகர் ஊமை செவிடர்
நிர்ப்பந்தராம் குஷ்டர்
நொந்த பல்வேறு ரோகஸ்தர்
நாடோறும் வந்தனர்

2   
மா வல்ல கரம் தொடவே
ஆரோக்கியம் பெற்றனர்
பார்வை நற்செவி பேச்சுமே
பெற்றே திரும்பினர்
மா வல்ல நாதா இன்றுமே
மறுகும் ரோகியும்
சாவோரும் தங்கும் சாலையில்
ஆரோக்கியம் அளியும்

3   
ஆரோக்கிய ஜீவ நாதரே
நீரே எம் மீட்பராய்
ஆரோக்கியம் ஜீவன் சீருமே
அருளும் தயவாய்
சரீரம் நற்சீர் நிறைந்து
உம் மக்கள் யாவரும்
சன்மார்க்க ஞானம் உள்ளோராய்
உம்மைத் துதிக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!