கண்களை ஏறெடுப்பேன் / Kangalai Yeredupen

கண்களை ஏறெடுப்பேன் / Kangalai Yeredupen

கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும்

கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

1
காலைத் தள்ளாட வொட்டார் உறங்காது காப்பவர்
காலைத்தள்ளாட வொட்டார்
வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர்

கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

2
பக்க நிழல் அவரே எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே
எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது
முக்காலம் நின்றென்னை நற்காவல் புரியவே

கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

3
எல்லாத் தீமைகட்கும் என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர்

கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் / Kangalai Yeredupen

கண்களை ஏறெடுப்பேன் / Kangalai Yeredupen | Joel Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!