கல்யாணமாம் கல்யாணம் கானாவூரு கல்யாணம் / Kalyaanamaam Kalyaanam Kaanaavooru Kalyaanam
கல்யாணமாம் கல்யாணம்
கானாவூரு கல்யாணம்
கர்த்தர் இயேசு கனிவுடனே
கலந்து கொண்ட கலியாணம்
1
விருந்தினர் விரும்பியே
அருந்த ரசமும் இல்லையே
அதை அறிந்த மரியாளும்
ஆண்டவரிடம் சொன்னாளே
கல்யாணமாம் கல்யாணம்
கானாவூரு கல்யாணம்
கர்த்தர் இயேசு கனிவுடனே
கலந்து கொண்ட கலியாணம்
2
கருணை வள்ளல் இயேசுவும்
கனிவாய் நீரை ரசமதாய்
மாற்றி அனைவர் பசியையும்
ஆற்றி அருளை வழங்கினார்
கல்யாணமாம் கல்யாணம்
கானாவூரு கல்யாணம்
கர்த்தர் இயேசு கனிவுடனே
கலந்து கொண்ட கலியாணம்
3
இல்லறமாம் பாதையில்
இல்லை என்னும் வேளையில்
சொல்லிடுவீர் அவரிடம்
நல்லறமாய் வாழுவீர்
கல்யாணமாம் கல்யாணம்
கானாவூரு கல்யாணம்
கர்த்தர் இயேசு கனிவுடனே
கலந்து கொண்ட கலியாணம்
கல்யாணமாம் கல்யாணம் கானாவூரு கல்யாணம் / Kalyaanamaam Kalyaanam Kaanaavooru Kalyaanam
