களித்துப் பாடு / Kaliththu Paadu / Kalithu Paadu
1
களித்துப் பாடு
தெய்வ இரக்கத்தை
நன்றாய் கொண்டாடு
மெய்ச்சபையே உன்னை
வரவழைத்துத் தயவாக
தேடினோர் அன்பைத் துதிப்பாயாக
2
கர்த்தர் பலத்த
கையினால் ஆளுவர்
புகழப்பட
அவரே தக்கவர்
விண் சேனை பக்திப் பணிவாக
அவரைச் சூழ்ந்து துதிப்பதாக
3
நிர்பந்தமான
அஞ்ஞான கூட்டமே
வெளிச்சம் காண
விழிக்க வேண்டுமே
உம் மீட்பராலே எந்தத் தீங்கும்
பாவத்தின் தோஷமும் எல்லாம் நீங்கும்
4
ஆகாரம் தாறார்
தகப்பன் வண்ணமாய்
காப்பாற்றி வாறார்
தினமும் திரளாய்
அவர் கை எவ்விடத்திலேயும்
பூரணமான இரக்கம் செய்யும்
5
மெய்க் கூட்டத்தாரே
கர்த்தரைப் பாடுங்கள்
பூலோகத்தாரே
துதிக்க வாருங்கள்
இங்கினிப் பயமே இராது
கிறிஸ்துவின் சபையே போற்றிப் பாடு